ரா.தங்கமணி
கோத்தா கெமுனிங்-
ஓர் உயிரை காப்பாற்ற
தானமாக வழங்கப்படுகின்ற ரத்தத்தில் மட்டுமே மதம்,சமய வேறுபாடுகளை கடந்து மனிதநேயம்
போற்றக்கூடியதாக திகழ்கிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ்
வலியுறுத்தினார்.
நாம் ஒருமுறை
வழங்கக்கூடிய ரத்த தானம் மூன்று பேரின் உயிரை காக்கக்கூடும் என்று சொல்கின்றனர். ரத்தத்திற்கு
மட்டுமே மத, சமய வேறுபாடு சாயம் பூசப்படவில்லை.
குறிப்பாக ‘ஹலால்’
முத்திரை குத்தப்படாத ஓர் உயிர் காக்கும் கவசமாக விளங்குகின்ற ரத்தத்தை தானமாக வழங்க
மக்கள் முன்வர வேண்டும். ஓர் உயிரை காக்கும் பொறுப்பு நாம் அனைவருக்கும் உண்டு. அதற்கான
சிறந்த வழிகாட்டியே ரத்ததானம் ஆகும்.
தற்போது மத்திய
ரத்த வங்கியில் ரத்தப் பற்றாக்குறை நிலவுகிறது. இத்தகைய சூழல் விபத்தில் சிக்குபவர்களுக்கும்
உடனடியாக ரத்தம் தேவைபடுவோருக்கும் ஆபத்தானதாக அமைந்துள்ளது.
ஆதலால் பொதுமக்கள்
ரத்ததானம் செய்வதற்கு முன்வர வேண்டும். தங்களது இடங்களில் நடைபெறும் ரத்ததான முகாம்களில்
பங்கேற்று ரத்த தானம் வழங்குவதை கடப்பாடாக கொள்ள வேண்டும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற
உறுப்பினருமான கணபதிராவ் குறிப்பிட்டார்.
இதனிடையே இந்த
ரத்ததான முகாமை ஏற்பாடு செய்த வேதாஸ் இந்திய உண்வகத்தினரை வெகுவாக பாராட்டுவதாக அவர் மேலும் சொன்னார்.
No comments:
Post a Comment