Tuesday, 15 September 2020

கொரோனா வைரஸ் – இறைச்சி மார்க்கெட்டிலிருந்து வெளியேறியதாக பொய் பரப்பினர்- சீன விஞ்ஞானி குற்றச்சாட்டு

வாஷிங்டன் -

உலகேயே தற்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரசை சீனாதான் தனது ஆய்வுக்கூடத்தில் உருவாக்கியது என்று சீன விஞ்ஞானி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரசை சீனா தான் கண்டுபிடித்தது என்று அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் உட்பட பல நிபுணர்கள் கூறிவந்தான். ஆனாலும் இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்து வந்தது.

ஆனால், தற்போது கொரோனா வைரசை சீனாதான் உருவாக்கியது. அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது என்று கூறியுள்ளார் சீன விஞ்ஞானி லீ மெய் யான். இவர் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் பொது சுகாதார கல்வி மையத்தில் விஞ்ஞானியாக இருந்து வந்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில் சீனாவில் இருந்து வெளியேறிய அவர், அமெரிக்காவுக்குச் சென்று விட்டார்.

தற்போது ரகசிய இடத்தில் இருக்கும் அவர் டிவி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பது;

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பான முதல் தகவல் எங்களுக்கு வந்தது. அப்போது மக்களுக்கு அதுபற்றி சரியாக தெரியவில்லை. இதை அறிந்த என் உயர் அதிகாரி இது பற்றி விசாரித்து விட்டு தகவல் அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

எனவே நான் விசாரணை மேற்கொண்டேன். அப்போது இந்த வைரஸ் வுஹானில் உள்ள ஆய்வுக்கூடத்தில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது என்பது எனக்கு தெரிய வந்தது.

இந்த ஆய்வுக்கூடத்தின் அருகேதான் இறைச்சி மார்க்கெட் உள்ளது. ஆய்வுக்கூடத்தில் இருந்து வைரஸ் வெளியானதை மறைத்து விட்டு மார்க்கெட்டில் இருந்து  வைரஸ் வெளியேறியதாக தகவல் பரப்பினர் என்று அவர் குற்றஞ்சாட்டினார்.


No comments:

Post a Comment