Sunday 13 September 2020

பிகேபிபி; 5,700 குடும்பங்களுக்கு உணவு, சுகாதார உதவிகள்- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

மீட்சிக்கான நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (பிகேபிபி) அமலில் உள்ள இக்காலகட்டத்தில் சிலாங்கூர் மாநிலம் முழுவதும் வருமானம் குறைந்த  5,700 குடும்பங்களுக்கு அடிப்படை உணவு, சுகாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன  என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

இந்த உதவித் திட்டத்தில் வறுமைக் கோட்டில் உள்ள குறிப்பாக முதியவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உதவிகள் வழங்கப்படுகின்றன.

57 மாவட்டங்களை உள்ளடக்கிடய இந்த உதவித் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 பேருக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக 348,000 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த உதவிப் பொருட்கள் யாவும் அந்தந்த கிராமத் தலைவர்களின் மூலம் வழங்கப்படுகின்றன.

அரிசி, மைலோ, ரொட்டி உட்பட பல்வேறு உதவிப் பொருட்களையும் முகக் கவரி, கைதூய்மி ஆகியவை இந்த உதவிப் பொருட்களில் அடங்கியுள்ளன.

இவ்வருடம் இறுதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ள பிகேபிபி நடவடிக்கையால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படகூடாது என்று அவர் சொன்னார்.

இத்தகைய உதவிப் பொருட்களை வழங்குவதன் மூலம் மக்களின் வாழ்வாதார சுமை குறைக்க முடியும் என்று கணபதிராவ் நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:

Post a Comment