கோலாலம்பூர்-
அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் செப்டம்பர் 1, இரவு 9 மணி முதல் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வழியாக ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) முதல் ஒளிப்பரப்பாகும் கல்யாணம் 2 காதல், புத்தம் புதிய உள்ளூர் தமிழ் காதல் தொடரைக் கண்டு களிக்கலாம்.
புகழ்பெற்ற உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர் கார்த்திக் ஷாமலன் இயக்கத்தில் மலர்ந்த கல்யாணம் 2 காதல் ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) பிரீமியராகும் முதல் உள்ளூர் காதல் தொடராகும். 22 அத்தியாயங்களைக் கொண்ட இத்தொடரில் மாகேந்திரன் ராமன், மலர்மேனி பெருமாள், யுவராஜ் கிருஷ்ணசாமி, பாஷினி சிவகுமார், ரவின் ராவ் சந்திரன், திருவல்லுவன், ரமிதாஸ்ரி, டிஷாலனி ஜாக் மற்றும் விஜய் நாயுடு உள்ளிட்ட பிரபலமான உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ளனர்.
தங்களது வாழ்க்கையில் பாக்கியநாதன் (மாகேந்திரன் ராமன்) மற்றும் மியாவின் (மலர்மேனி பெருமாள்) வருகைக்குப் பிறகு பல இடர்களை சந்திக்கக்கூடும் என்பதை அறியாமல் காதல் வயப்படும் ஹரிஷ் (யுவராஜ் கிருஷ்ணசாமி) மற்றும் சௌமியாவைப் (பாஷினி சிவகுமார்) பற்றியக் கதையைச் சித்தறிக்கின்றது கல்யாணம் 2 காதல் தொடர் .
அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் செப்டம்பர் முழுவதும் கல்யாணம் 2 காதலின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டு களிக்கலாம் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் ஸ்ட்ரீம் செய்து மகிழலாம்.
No comments:
Post a Comment