கி.மணிமாறன்.சுங்கை சிப்புட்.பேரா
பல இன மக்கள்,
பல மொழி தேசம், பல கலாச்சார கூறுகளை கொண்ட நாடு என்று உலக அரங்கில் தனக்கென தனி செல்வாக்கில்
மிளிர்ந்து கொண்டிருக்கிறது ‘மலேசியா’.
ஒரே இன மக்களாக
இருந்தாலும் உள்நாட்டுச் சண்டை, கலவரம், இன குழுக்களின் மோதல் என பல நாடுகளில் இன்னமும்
தங்களது வாழ்வாதாரத்திற்காக மக்கள் சண்டையிட்டுக் கொள்ளும் நிலையில் பல மக்களுடன் சகோதரத்துவ
மாண்போடு சகிப்புத்தன்மையை வளர்த்து ஒற்றுமையை நிலைநாட்டிக் கொண்டிருப்பதே மலேசியாவின்
சிறப்பம்சமாகும்.
மலேசியாவின்
அடையாளமே மூவின மக்கள் தான். பிரிட்டிஷாரின் காலனித்துவ ஆதிக்கத்தின்போது ‘மலாயா’ என்று
அன்று அழைக்கப்பட்ட மலேசியாவின் சுதந்திர பிரகனடத்தின்போது கையெழுத்திட்ட வலராற்றுக்குரியவர்கள்
துங்கு அப்துல் ரஹ்மான், துன் டான் செங் லோக், துன் வீ.தி.சம்பந்தன் ஆகியோரே ஆவர்.
மூவின மக்கள்
வாழும் இந்நாடு அனைத்து இனத்தவருக்குமே சொந்தமானதாகும். நாங்கள் தான் இம்மண்ணிற்கு
சொந்தக்காரர்கள் என்று எந்தவொரு இனமும் சொந்தம் கொண்டாட முடியாது. மலாய்க்கார்ரகள்,
சீனர்கள், இந்தியர்கள் என்ற மூவின மக்களின் வரலாற்றில் யாருடைய அத்தியாயத்தையும் மறைத்து
விட்டு மலேசியாவின் சரித்திரத்தை எழுதிவிட முடியாது.
காலனித்துவ
ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு கிடந்த இந்நாட்டை சுதந்திர பூமியாக பிரகடனப்படுத்த பல ஆன்மாக்கள்
ரத்தமும் வியர்வையும் சிந்தியுள்ளன. ரத்தமும் வியர்வையும் சிந்தி வாங்கிக் கொடுக்கப்பட்ட
இந்நாட்டின் சுதந்திரத்தில் இனவாதமும் மதவாதமும் பூசப்படக்கூடாது.
அனைத்து இன
மக்களின் வாழ்வாதாரமும் இந்நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து இன மக்களின்
கலை, கலாச்சார மாண்புகளும் தாய்மொழி கல்வி உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுதந்திர
மாண்போடு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக சில கேலிக்கூத்தாக்குவது
நிறுத்தப்பட வேண்டும்.
63ஆம் ஆண்டு
சுதந்திர தினத்தைக் கொண்டாடும் மலேசியர்கள் முதலில் தங்களை ‘மலேசியர்’களாக உணர்தல்
வேண்டும். முதலில் தான் ம்லேசியன் என்ற உணர்வே 63 ஆண்டுகளை எவ்வித இன மோதலும் கலவரமும்
இல்லாத நாடாக கண்டிருந்த மலேசியா இன்னும் நூறாண்டுகளுக்கு சிறப்பாக செல்லும்.
மூவின மக்களின்
அடையாளமே மலேசியா. அந்த அடையாளத்தை தொலைத்து விட்டு வெறுமனே தேசியக் கொடிகளை அசைப்பதால்
மட்டும் தேசப்பற்று மேலோங்கி விடாது.
நாட்டின் சுதந்திரத்திற்காக
உயிர் போராட்டம் நடத்திய புனித ஆன்மாக்களின் தியாக உணர்வை போற்றும் வகையில் மலேசியாவின்
அடையாளத்தை என்றும் போற்றி காப்போம்.
63 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை கொண்டாடும் மலேசியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து காப்போம். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.
No comments:
Post a Comment