ரா.தங்கமணி
கோலாலம்பூர்
மலேசிய இந்திய சமூகத்தில் இளம் வர்த்தகர்களை அடையாளம் காணும் நோக்கில் மலேசிய இந்திய வர்த்தகர் தொழிலியல் சங்கங்கள் சம்மேளனத்தின் (மைக்கி) 'ராக்கான் மைக்ரோ' எனும் திட்டத்ததின் கீழ் 2,400 இளம் வர்த்தகர்களை உருவாக்கும் முயற்சியில் களம் கண்டுள்ளது.
இந்திய சமுதாயத்தின் வர்த்தகத்தின் ஈடுபடும் எண்ணம் கொண்டவர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் முறையான வழிகாட்டுதல்கள், அணுகுமுறைகள் இல்லாத காரணத்தினாலேயே பெரும்பாலானோர் அதில் பின் தங்கி விடுகின்றனர் அல்லது தோல்வி அடைகின்றனர்.
இத்தகைய இளைஞர்களை உருவாக்கும் பொருட்டு ராக்கான் மைக்ரோ திட்டத்தின் கீழ் 2,400 இளைஞர்களை அடையாளம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
வரும் நவம்பர் மாதத்திற்குள் இந்த 2,400 இளைஞர்கள் வர்த்தகத் துறையில் சிறந்தவர்களாக உருவாக்கும் நடவடிக்கை துரிதப்படுத்துவதோடு இது நகர்ப்புறம் மட்டுமல்லாது உட்புறப்பகுதிகளில் உள்ள இளம் வர்த்தகர்களை உருவாக்கும் முயற்சியாக 60 இடங்களில் இந்நிகழ்வு தொடரப்படும் என்று ராக்கான் மைக்ரோ திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.
இந்நடவடிக்கை மித்ரா, தெக்குன் உட்பட பல்வேறு அரசு சார்பு நிறுவனங்களின் பங்களிப்புடன் நடத்தப்படும் நிலையில் இது இந்திய இளைஞர்களுக்கு வர்த்தகத் துறையில் ஈடுபவதற்கு தூண்டுகோலாக அமைந்திடும் என்று அவர் சொன்னார்.
சிறு, நடுத்தர நிறுவனத் தலைவர் டத்தோஶ்ரீ சைட் ஹுசேய்ன் கலந்து கொண்டு நிகழ்வை தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தெக்குன், ஏகேபிகே உட்பட பல்வேறு அரசு சார்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் வர்த்தகர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment