ரா.தங்கமணி
ஈப்போ-
பாஸ் ஆதரவு மன்றத்தில் (டிஎச்பிபி) இணைந்துள்ளது அது இந்தியர்களுக்கு எதிர்ப்பான ஒரஉ நடவடிக்கை அல்ல. மாறாக இஸ்லாமிய கட்சிகளிடமிருந்து இந்தியர்களுக்கு எத்தகைய அனுகூலங்கள், சலுகைகள் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற எண்ணத்திலேயே பாஸ் ஆதரவு மன்றத்தில் இணைந்துள்ளதாக பேரா மாநில டிஎச்பிபி இளைஞர் பிரிவு துணைத் தலைவர் அருள்லோகா தெரிவித்தார்.இன்று மத்திய அரசாங்கத்தை அமைத்துள்ள பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் அம்னோ, பெர்சத்துக்கு அடுத்து பாஸ் கட்சி இடம்பெற்றுள்ளது.
பாஸ் கட்சி இஸ்லாமியர்களை சார்ந்த கட்சியாக இருந்தாலும் இஸ்லாம் அல்லோதோரின் நிலைப்பாட்டை உணர்வதற்கு பாஸ் ஆதரவு மன்றம் தோற்றுவிக்கப்பட்டு துரிதமாக செயல்பட்டு வருகிறது.
இஸ்லாமியர் கட்சி என்பதற்காக பாஸ் கட்சியை ஒதுக்குவதால் அதன் மூலம் கிடைக்கப்பெறுகின்ற அனுகூலங்களும் சலுகைகளும் நாம் இழக்க நேரிடலாம்.
இன்று மத்திய அரசாங்கத்திலும் பல மாநில அரசாங்கங்களிலும் பாஸ் கட்சி அங்கத்துவம் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் இஸ்லாம் அல்லாதோருக்கு குறிப்பாக இந்திய சமுதாயத்திற்கு இக்கட்சியின் மூலம் எவ்வாறு சலுகைகளை பெற்று கொடுப்பது என்பதை நோக்கமாகக் கொண்டே பாஸ் ஆதரவு மன்றத்தில் இணைந்து சேவையாற்றி வருவதாக அருள்லோகா தெரிவித்தார்.
வரும் தேர்தலில் பாஸ் ஆதரவு மன்றத்தின் மூலம் சில சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் இஸ்லாம் அல்லாதோருக்கு ஒதுக்கப்படும் நிலையில் அதன் வழி இஸ்லாம் அல்லாதோரும் பயனடையும் வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எங்கு இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. என்ன செய்துக் கொண்டிருக்கிறோம் என்பதே முக்கியம். அதனாலேயே பாஸ் ஆதரவு மன்றத்தில் ஈடுபட்டு செயலாற்றி கொண்டிருக்கிறேன் என்று அவர் சொன்னார்.
No comments:
Post a Comment