மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அல் ஜஸீராவில் ஒளியேறிய ''Murder In Malaysia'' எனும் ஆவணப்படத்திற்காக தனியார் ஒளிபரப்பு நிலையமான ஆஸ்ட்ரோவுக்கு தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் (SKMM) அபராதம் விதித்துள்ளது.
101 EAST எனும் நிகழ்ச்சியின் வாயிலாக ''Murder In Malaysia'' ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. ஆஸ்ட்ரோவின் முதன்மை நிறுவனமான Measat Broadcast Network Systems Bhd இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி ஒளிபரப்பப்பட்ட இந்த ஆவணப்படம் தொடர்பில் ஐந்தாண்டுகளுக்கு பின்னர் அபராதம் விதிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment