கோலாலம்பூர்-
எஸ்ஆர்சி நிறுவனம்
தொடர்புடைய வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமக்கு அதிருப்தி அளிப்பதாகவும் ஊழல்
குற்றச்சாட்டில் தனது நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பதற்கு தொடர்ந்து போராட்டம்
நடத்தவிருப்பதாக முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் நீதிமன்ற வளாகத்தில்
தெரிவித்தார்.
எஸ்ஆர்சி நிறுவனம் தொடர்பில் தமது தரப்பு சார்பாக வாதிட்ட
டான்ஶ்ரீ ஷாபி, வழக்கறிஞர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வாதிட்ட போதிலும் அதனை நிராகரித்து
விட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது அதிருப்தி அளிக்கிறது. இருந்த போதிலும் மேல் முறையீட்டு
நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடுவேன் என்று அவர் சொன்னார்.
கூடிய விரைவில்
தமது தரப்பு வாதத் தொகுப்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும்
தமது நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைத்தெறிவேன் என்று நீதிமன்றத்தில் திரண்டிருந்த
100க்கும் மேற்பட்ட உள்ளூர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஶ்ரீ நஜிப் இவ்வாறு
கூறினார்.
இதற்கு முன்னதாக
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிதி மோசடி, கள்ளப்பணம் பரிமாற்றம், அதிகார துஷ்பிரயோகம்
ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட டத்தோஶ்ரீ நஜிப்புக்கு
12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வெ.210 மில்லியன்
அபராதமும் வழங்கி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
No comments:
Post a Comment