ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள உணவகங்களில் நாளை தொடங்கி அமர்ந்து உண்ணலாம் என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உணவகங்களில் அமர்ந்து உண்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் நாளை தொடங்கி உணவகங்கள் வழக்கம்போல் செயல்படலாம்.
காலை 7.00 மணி தொடங்கி இரவு 10.00 மணி வரையில் மட்டுமே உணவகங்கள் செயல்பட முடியும் என்பதோடு உணவகங்களுக்கு வெளியிலும் வாகன நிறுத்துமிடத்திலும் மேசைகளை போடக்கூடாது.
உணவகங்களுக்கென வரையறுக்கப்பட்டுள்ள செயல்முறைகளை உணவக உரிமையாளர்கள் பின்பற்றுகிறார்களா? என்பதை அதிகாரிகள் கண்காணிப்பர் என்று அவர் சொன்னார்.
No comments:
Post a Comment