Friday 29 May 2020

ப.ஹராப்பானின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தெரியாது- மகாதீர்

கோலாலம்பூர்-

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மீண்டும் புத்ராஜெயாவை கைப்பற்றினால் பிரதமராக பதவியேற்பது யார்? என்பது தமக்கு தெரியாது என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

ப.ஹராப்பான் கூட்டணியின் புதிய பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து தம்மிடம் இன்னும் விவாதிக்கப்படவில்லை என்று அவர் சொன்னார்

இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

இதனிடையே, பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்தால் பிரதமராக பதவியேற்பது யார்? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறனார்.

No comments:

Post a Comment