சுங்கை சிப்புட்-
பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஹாஜி சூல்கிப்ளியை சுங்கை சிப்புட் மஇகாவினர் மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் இரு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன் தெரிவித்தார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் எனும் நிலையில் இங்குள்ள ஓர் இந்தியரை அதிகாரியாக நியமிக்க வேண்டும். சுங்கை சிப்புட்டில் உள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் வகையில் இந்த நியமனம் அமைய வேண்டும்.
அதோடு, சுங்கை சிப்புட்டில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் நிலப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்.
நில விவகாரங்கள் அனைத்தும் மாநில ஆட்சிக்குழுவை சார்ந்த நிலையில் இவ்விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மஇகா முன்வைத்துள்ளதாக அவர் சொன்னார்.
சுங்கை சிப்புட்டில் பல நிலப் பிரச்சினைகள் உள்ளன. விவசாயம், குடியிருப்பு, கால்நடை வளர்ப்பு என பல பிரச்சினைகள் இருக்கின்றன. இப்பிரச்சினைகளுக்கு எல்லாம் மஇகா பல காலமாக போராடி வருகிறது.
அவற்றுக்கு உரிய தீர்வு காண்பதற்கு டத.தோ சூல்கிப்ளி ஆக்ககரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று மஇகா கோரிக்கை விடுத்தது என்று அவர் சொன்னார்.
கோரிக்கையை டத்தோ சூல்கில்ளியிடம் வழங்கும் ராமகவுண்டர் |
இந்த சந்திப்பில் சுங்கை சிப்புட் மஇகா தலைவர் ராமகவுண்டர், துணைத் தலைவர் கி.சேகரன், உதவித் தலைவர் அண்ணாமலை உட்பட நிர்வாகக் குழுவினர் இடம்பெற்றனர்.
No comments:
Post a Comment