Saturday 30 May 2020

சுயநல அரசியல் + பதவி போராட்டம் - மலேசியாவை சுற்றலில் விடும் அரசியல் சதிராட்டம்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
மலேசியாவை சுற்றலில் விட்டுக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தாலும் அரசியல் அக்கப்போர் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கலாம் என்ற அச்சம. மலேசியர்களிடையே தொற்றி கொண்டுள்ளது.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியை விரட்டி அடித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி.

பிரதமராக பதவியில் அமர்ந்த துன் மகாதீர் வாக்குறுதி அளித்தப்படி டத்தோஸ்ரீ அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பதற்கு இணைக்கம் கண்டிருந்தாலே பக்காத்தான் கூட்டணி சிதறியிருக்காது... ஆட்சியும் பறிபோயிருக்காது.

சுயநல அரசியலின் பதவி போராட்டத்தின் உச்சகட்டமாக பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி அமைத்து டான்ஸ்ரீ் முஹிடின் யாசின் பிரதமராகவும் பதவியேற்றுக் கொண்டார்.

ஆட்சி அதிகாரம் பறி போன அதிர்ச்சியில் உறைந்த துன் மகாதீர் டான்ஸ்ரீ முஹிடினுடன் தொடங்கிய நேரடி மோதல் பெர்சத்து கட்சியிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

பெர்சத்து கட்சியிலிருந்து துன் மகாதீர் நீக்கப்பட்டதாகவும் முஹிடின் தரப்பும் டான்ஸ்ரீ முஹிடினை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாக துன் மகாதீரும் அறிக்கை போராட்டம் நடத்தத் தொடங்கி விட்டனர்.

இந்த போராட்டத்தில் யார் வெல்வார் என்பதை காட்டிலும் மீண்டும் ஓர்  ஆட்சி மாற்றம் நிகழுமா? என்ற அச்சமே மலேசியர்களிடம் உள்ளது.

கட்சி உட்பூசல், ஆட்சி அதிகாரம் என்று மலேசியாவில் அரசியல் களம் கொரோனா தாக்கத்தையும் மிஞ்சி நிற்பதாக உள்ளது.

நல்லா இருந்த பிகேஆர் கட்சியை உடைத்து ஆட்சி அதிகாரத்தையே மாற்றி அமைத்ததன் 'கர்மாவினை' பெர்சத்து கட்சியை மட்டும் சும்மா விட்டு விடுமா?

No comments:

Post a Comment