கோலாலம்பூர்-
பிரதமர் பதவியிலிருந்து டான்ஸ்ரீ முஹிடின் யாசினை விரட்டியடிக்கும் வரை தாம் ஓயப்போவதில்லை என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் சூளுரைத்துள்ளார்.
கடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்ம ஊழல் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர வைத்துள்ள முஹிடினின் செயலை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்.
கொல்லைப்புற வாயிலாக இன்று அரசாங்கத்தை அமைத்துள்ள டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அப்பதவியிலிருந்து விலக்கப்படும் வரை தாம் ஓயப்போவதில்லை என்று அவர் சொன்னார்.
கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை நேரடியாகவே எதிர்த்த துன் மகாதீர், 14ஆவது பொதுத் தேர்தலில் தேமுவை தோற்கடித்து பிரதமர் பிதவியிலிருந்து நஜிப்பை விலக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment