ரா.தங்கமணி
தைப்பிங்-
மஇகா மத்திய செயலவை உறுப்பினர் மு.வீரன் தைப்பிங் நகராண்மைக் கழக உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
பேராக் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ந்து பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி அமைத்துள்ள நிலையில் இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள மஇகாவுக்கு நகராண்மைக் கழக உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று தைப்பிங் நகராண்மைக் கழக உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட வீரன், தைப்பிங் வட்டார மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றவிருப்பதாகவும் இவ்வாய்ப்பை தமக்களித்த மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஏற்கெனவே ஈப்போ மாநகர் மன்றத்தின் உறுப்பினராக பதவி வகித்த வீரன், அச்சமயத்தில் புந்தோங் வட்டார மக்களின் பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கையை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment