பூச்சோங்-
மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சிலாங்கூர்,பூச்சோங்கைச் சேர்ந்த திருமதி ராதாவுக்கு நேற்றிரவு நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தார் கணவர் குணசேகரன்.
ஆனால் சிகிச்சை பலனின்றி திருமதி ராதா மரணமடைந்தார்.
மனைவியின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்த குணசேகரனுக்கும் நெஞ்சுவலி ஏற்பட சில மணிநேரங்களில் அவரும் உயிரிழந்தார்.
இவ்விருவரின் மரணமும் அவர்களின் குடும்பத்தினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மரணத்திலும் கூட பிரியாத தம்பதியர் என சமூக ஊடக பயனீட்டாளர்கள் சமூக ஊடகங்களில் தங்களது அனுதாபத்தை பகிர்ந்து வருகின்றனர்
No comments:
Post a Comment