ரா.தங்கமணி
ஷா ஆலம்-
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் இன்றைய அரைநாள் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஜனநாயகத்தின் கேலிகூத்து என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வர்ணித்தார்.
மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை கவிழ்த்து சுயநலவாதிகளின் கூடாரமாக இன்றைய பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் திகழ்கிறது.
பிரதமாக நியமனம் செய்யப்பட்டுள்ள டான்ஸ்ரீ முஹிடினர யாசின் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது அவசியமாகும்.
ஆனால் தனக்கு பெரும்பான்மை இல்லாத்தால் அதனை தவிர்க்கும் பொருட்டு இரு வாரங்களுக்கு நடத்தப்பட வேண்டிய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஒருநாள் நடத்தப்படுவதாக சொன்ன கூட்டத் தொடர் அரைநாள் மட்டுமே நடத்தப்படுவது ஜனநாயகத்தின் கேலிக்கூத்தாக அமைந்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment