ரா.தங்கமணி
ஈப்போ-
பக்காத்தான் ஹரப்பான் ஆட்சி கலைந்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அமைத்துள்ள பேராக் மாநிலத்தில் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் மாநில மந்திரி பெசாரின் ஆலோசகராக நியமனம் செய்படலாம் என்று நம்பப்படுகிறது.
அங்கு நிகழ்ந்த ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் ஜசெகவிலிருந்து விலகிய சிவசுப்பிரமணியம் தன்னை சுயேட்சை வேட்பாளராக அறிவித்துக் கொண்டதோடு மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அஹ்மாட் பைசாலுக்கு ஆதரவு தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அரசில் ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்படுக்கூடும் என அறியப்படுகிறது.
சிவசுப்பிரமணியம் ஆட்சிக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்படாததற்கு பேரா மஇகாவின் எதிர்ப்பும் ஒரு காரணம் என தகவல்கள் கூறுகின்றன.
இதற்கு முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இந்தியர் பிரதிநிதியாக சட்டமன்ற உறுப்பினர் யாரும் இல்லாத நிலையில் முன்னாள் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் மஇகாவைச் சேர்ந்த டான்ஶ்ரீ எஸ்.வீரசிங்கம், டத்தோ வ.இளங்கோ ஆகியோரை சிறப்பு ஆலோசகராக நியமனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment