Friday 15 May 2020

ஜூன் பிற்பகுதியில் இரண்டாம் கட்ட கோவிட்-19 அலை- எச்சரிக்கிறார் டாக்டர் நோர் ஹிஷாம்

புத்ராஜெயா-
ஜூன் மாதம் பிற்பகுதியில் இரண்டாம் கட்ட கோவிட்-19 அலை மலேசியாவில் ஏற்படக்கூடும் என்று சுகாதாரத்துறை தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் எச்சரித்தார்.
கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் கோவிட்-19 வைரசின் இரண்டாம் கட்ட அலை இன்னும் இரண்டு அல்லது நான்கு வாரங்களில் மலேசியாவில் மீண்டும் தலைதூக்க வாய்ப்புள்ளது.

தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் செயல் நடமுறைகளை மக்கள் கடைபிடிக்கத் தவறினால் இரண்டாம் கட்ட கோவிட்-19 அலை மிகப் பெரிய பாதிப்பை கொண்டு வருவதோடு   மீண்டும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படலாம் என்று கூறினார்.

No comments:

Post a Comment