Wednesday, 29 April 2020

மலேசிய தமிழ் இசைத்துறையின் புரட்சி் நாயகன் திலீப் வர்மன் #HBDDhilipVarman

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
மலேசிய தமிழ் இசைத்துறை வளர்ச்சி கண்டாலும் பெயர் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லாமல் தென்னிந்திய இசைகளுக்கே மலேசிய இந்தியர்களை அடிமையாக்கி வைத்திருந்தது.

80ஆம்,90ஆம் ஆண்டு காலகட்டங்கள் யாவும் இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என இசை உலகை அரசாட்சி செய்ய மலேசிய இசை கலைஞர்களும் தங்களை இசையின் பரிணாம வளர்ச்சியில் தங்களை மெருகேற்றி கொண்டிருந்தனர்.

எலிகேட்ஸ், ஓஜி நண்பா, டார்க்கி உட்பட  பல கலைஞர்கள் தங்களை இசைத்துறையில் முத்திரை பதிக்க முயற்சி செய்ய தென்னிந்திய இசைக்கு நிகரில்லாமல் தனி ஒரு பாணியில் மலேசிய இசைத்துறை பயணித்துக் கொண்டிருந்தது.

அந்த தருணத்தில் தான் 'உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ' எனும் மெல்லிய குரலிசையில் மலேசியர்களின் காதுகளுக்கு தேனிசையாய் பாய்ந்தது ஒரு குரல்.

 மலர்களை வட்டமிடும் தேனீக்களை போல் வானொலி அலைவரிசையில் திரும்ப திரும்ப ஒலிக்கும் அந்த பாடலை  கேட்பதற்கே ஒரு ரசிகர் கூட்டம் உருவாக்கி கொண்டிருந்தது அந்த குரல் தான் பின்னாளில் இசை புரட்சியின் வித்து என்பதை உணராமலே.

ஆம்... அந்த தேனிசை குரலுக்குச் சொந்தக்காரர் பாடகர் திலீப் வர்மன் ஏற்படுத்திய மாயை மலேசிய தமிழ் இசைத்துறையையே சுழற்றி போட்டது.

அதுவரை மேலை நாட்டு இசைத்துறைக்கு மட்டுமே அடிமையாகி இருந்த மலேசிய இந்தியர்கள் மெல்ல மெல்ல மெல்லிசை பாடலுக்கு தங்களை அடிமையாக்கிக் கொள்ள தயாராகினர்.

இசையமைப்பாளர் ஜெய்-இன் இசையில் திலீப் வர்மன் குரலில் ஒலித்த 'உயிரை தொலைத்தேன்' பாடலே இன்று மலேசிய இசைத்துறையில் நிகழ்ந்துள்ள அதிரடி மாற்றத்திற்கான ஆரம்பம் என்பதை மறுக்க முடியாது.

'கனவெல்லாம் நீதானே' எனும் பாடலுக்கு இசையமைத்து உயிர் கொடுத்த திலீப் வர்மனின் மற்றொரு படைப்பு 90ஸ் கிட்ஸ்களின் ஆல் டைம் பேவரைட் பாடல் ஆகும்.

தமிழக இசைக் கலைஞர்களான ஹரிஹரன், உன்னி கிருஷ்ணன், சங்கர் மகாதேவன் போன்ற இசை கலைஞர்களுக்கு மத்தியில் இசை நாயகனாய் உருவெடுத்தது திலீப் வர்மனின் குரலிசைக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம் ஆகும்.

தனது காந்த குரலில் மூலம் இளைஞர்களை சென்றடைந்த பாடல்களின் இசைத்துறையில் நீங்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார் திலீப் வர்மன்.

மீண்டும் மீண்டும் ஓயாமல், என்னவளே என்னை மறந்தது ஏனோ என திலீப் வர்மன் செய்தது எல்லாம் இசை புரட்சியே.

100் பாடல்களுக்கும் மேல் பாடி  இசை வானில் வெற்றி கொடி நாட்டி, இசைத்துறையில் ஈடுபட நினைக்கும் இளைஞர்களுக்கு ஒரு முகவரியாய் திகழும் திலீப் வர்மனின் மாயக் குரல் ஓய்வில்லாமல் என்றும் இசை புரட்சியை செய்திட வேண்டும்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர், பாடகர் திலீப் வர்மனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

 #HBDDhilipVarman

No comments:

Post a Comment