புத்ராஜெயா-
நாட்டின் தலைநகரில் வசிப்போர் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதி் இல்லை என்று முதன்மை தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) அமலில் உள்ள இக்காலகட்டத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதி் வழங்கப்படவில்லை. இதற்கு முன்னர் வெளியான தகவலில் குழப்பம் அடைய வேண்டாம்.
தலைநகரில் மட்டுமல்லாது பிற இடங்களில் வசிக்கும் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புபவர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் இணையம் மூலமாகவும் போலீசிலும் விண்ணப்பிக்க வேண்டும்.
அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்ட பின்னரே அதற்கான அனுமதி வழங்கப்படும்.
சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களுக்காக நடைமுறை செயல் திட்டம் வரையப்படும் என்ற அவர், அதன் அடிப்படையிலேயே அனுமதி வழங்கப்படுவதோடு அனுமதி வழங்கப்படும் நபர்கள் அதனை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
No comments:
Post a Comment