Wednesday, 29 April 2020

மக்கள் நலச் சேவையில் மிரள வைக்கும் கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடங்கி கிடக்கின்றனர்.

தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதால் வருமானம் ஏதுமின்றி பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நடுத்தர வர்க்கத்தினர்தங்களுக்கு யாரேனும்  உதவ மாட்டார்களா? என ஏங்கி கொண்டிருக்கின்றனர்.

அத்தகைய மக்களுக்கு தனது சட்டமன்ற உறுப்பிர் மக்கள் சேவை மையத்தின் வழி உதவிக்கரம் நீட்டியுள்ளார் YB வீ.கணபதிராவ்.

மக்கள் சேவை மையத்தின் வழி ஆயிரக்கணக்கான மக்களுக்கு மளிகைப் பொருட்களை வழங்கியுள்ளார்.

தன்னோடு மட்டும் அந்த சேவை நின்றுவிடாமல் தன்னை சார்ந்துள்ள மாவட்ட மன்ற உறுப்பினர்கள்,  கிராமத் தலைவர்கள், இந்திய சமூகத் தலைவர்கள் ஆகியோரையும் களத்தில் இறக்கியுள்ளார்.

அதோடு, சமய விழாக்களை நடத்துவது மட்டும் ஆலயங்களின் திருப்பணி ஆகாது; இதுபோன்ற தருணங்களில் மக்களுக்கு சேவை செய்வதே மகேசனுக்கு செய்யும் தொண்டு என்பதை வலியுறுத்தி சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஆலயங்கள் தங்களது பகுதியில் உள்ள மக்களுக்கு உதவிட வேண்டும் எனும் நோக்கில் 'அட்சயப் பாத்திரம்' திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

ஆலயங்களுக்கு மாநில அரசு வழங்கும் மானியத்தில் ஒரு பகுதியை இத்திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று சிந்தனையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு மட்டுமல்லாது மலாய்க்காரர்கள், சீனர்களுக்கும் உதவிப் பொருட்கள் சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள கணபதிராவ, அவர்களது சமூகத் தலைவர்களின் வாயிலாக உதவிப் பொருட்களை வழங்கி வருகிறார்.

ஆலயங்கள் மட்டுமல்லாது பள்ளிவாசல், தேவாலயங்கள், சீன ஆலயங்கள் ஆகியவற்றின் வாயிலாகவும் உதவிப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

கோவிட்-19 வைரஸ் பரவல் ஏற்படுத்தியுள்ள இக்கட்டான சூழலில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது எனும் நோக்கில் முன்னெடுக்கப்படும் மக்கள் நலச் சேவையில் கணபதிராவ் மிரள வைக்கின்றார்.

No comments:

Post a Comment