கோவிட்-19 வைரஸ் தொற்றால் வறுமை சூழலில் வாழும் மக்களுக்கு சிலாங்கூர் தஞ்சோங் சிப்பாட், பெட்போர்ட் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகத்தினர் உதவிப் பொருட்களை வழங்கி உதவினார்.
அண்மையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 70 குடும்பங்களுக்கு இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
கோவிட்-19 வைரஸ் தொற்றால் வருமானத்தை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் வறுமையில் வாடி விடக்கூடாது எனும் நோக்கில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் அறிமுகப்படுத்திய 'அட்சயப் பாத்திரம்' திட்டத்தின் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment