கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 80 விழுக்காடு நோயாளிகளுக்கு இந்நோயின் அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்று சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
வெளிநாடுகளை போல் அல்லாமல் சில நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நாங்கள் கண்டறிந்தால் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
கோவிட்-19 நோயாளிகள் 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
1) அறிகுறிகள் ஏதும் இல்லை
2) லேசான அறிகுறிகளை கொண்டது
3) அழற்சியை கொண்டது. ஆனால் ஆக்ஸிஜன் உதவி தேவையில்லை
4) அழற்சியை கொண்டது. ஆக்ஸிஜன் உதவி தேவைப்படுகிறது
5) 'ஐசியு' பிரிவில் அனுமதித்து சிகிச்சை, சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது
இதுவே அந்த 5 வகையான நடைமுறையாகும் என்று அவர் சொன்னார்.
No comments:
Post a Comment