Tuesday, 10 March 2020

துணைப் பிரதமர் இல்லாத அமைச்சரவை

புத்ராஜெயா-
துணைப் பிரதமர் இல்லாத அமைச்சரவையை பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் இன்று அறிவித்தார்.

கல்வி, சமூகம், பொருளாதாரம் ஆகிய கூறுகளை உள்ளடக்கிய பதவிகளுக்கு தகுதி வாய்ந்த 4 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதால் துணைப் பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று அவர் சொன்னார்.

இதனிடையே அலுவல் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்ல நேரிட்டால் இந்த நால்வரில் ஒருவர் அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமையேற்பர் என்று டான்ஸ்ரீ முஹிடின் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment