Tuesday, 10 March 2020

மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன், கூட்டரசு பிரதேச துணை அமைச்சர் டத்தோஶ்ரீ எட்மண்ட் சந்தாரா

கோலாலம்பூர்-


பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் இன்று அறிவித்த அமைச்சரவையில் மஇகாவின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் மனிதவள அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் 8ஆவது பிரதமராக பதவியேற்றுள்ள டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தனது அமைச்சரவையை இன்று அறிவித்தார்.

அதில் மஇகாவை பிரதிநிதித்து டத்தோஶ்ரீ சரவணன் மட்டுமே அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் தாப்பா தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

மேலும், சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எட்மண்ட் சந்தாரா கூட்டரசு பிரதேச துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிகேஆர் கட்சியைச் சேர்ந்த டத்தோஶ்ரீ எட்மண்ட் சந்தாரா அண்மையில் நிலவிய அரசியல் நெருக்கடியில் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியை ஆதரித்து பிகேஆர் கட்சியிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment