Thursday, 12 March 2020

அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும்- பிரதமர்

புத்ராஜெயா-
அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் இன்னும் ஒரு மாத காலத்திற்குள்  தங்களது சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் வலியுறுத்தினார்.
புதிய தேசிய கூட்டணி (பெரிக்காத்தான் நேஷனல்) அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் ஊழலில் இருந்து விடுபட்டவர்கள் என்பதை புலப்படுத்த இந்நடவடிக்கை அவசியமானது.

இன்னும் ஒரு மாத காலத்திற்குள் தங்களின் சொத்து விவரங்கள் அடங்கிய அறிக்கையை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எஸ்பிஆர்எம்) அவர்கள் வழங்க வேண்டும் என்று இன்று  நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

No comments:

Post a Comment