ஈப்போ-
பேரா மாநிலத்தை ஆட்சி புரிய பக்காத்தான் கூட்டணிக்கு 'அதிர்ஷ்டம்' இல்லை என்ற நிலையே தற்போது
மீண்டும் நிலவியுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல்
சுனாமியில் பக்காத்தான் ராக்யாட் (மக்கள் கூட்டணி) கூட்டணியிடம் வீழ்ந்த பேரா மாநில
அரசு 9 மாத ஆட்சிக்கு பின்னர் மீண்டும் தேசிய முன்னணி வசமானது.
தொடர்ந்து 2013ஆம் ஆண்டு தேர்தலில்
மாநில அரசை தேமு தக்கவைத்துக் கொண்ட நிலையில் 2018ஆம் ஆண்டு தேர்தலில் பேரா மாநில அரசு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி
வசமானது.
தற்போது 21 மாத கால ஆட்சிக்கு
பின்னர் பக்காத்தான் ஹராப்பான் (நம்பிக்கைக் கூட்டணி) கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டு
தற்போது பெரிக்காத்தான் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது.
இருமுறை மக்கள் பலத்தால் பக்காத்தான்
கூட்டணி ஆட்சி அமைத்த போதிலும் அரசியல் சூழல்
காரணமாக அக்கூட்டணி ஒரு தவணை முழுவதும் ஆட்சி அமைக்க முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment