Saturday, 21 March 2020

ஞாயிற்றுக்கிழமை முதல் ராணுவ பயன்பாடு- தற்காப்பு அமைச்சர்

புத்ராஜெயா-
கோவிட்- 19  வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்த போலீசாருக்கு உதவிடும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ராணுவம் களமிறக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
தற்போது நாட்டில் மக்கள் நடமாட்ட கட்டுபாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் வெளியில் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பணிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், அரசாங்கம், போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த ராணுவம் களமிறக்கப்படவுள்ளது.

கோவிட்-19 நோய் தொற்றை குறைக்கும் வகையில் 18ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் அறிவித்தார்.

No comments:

Post a Comment