Saturday, 21 March 2020

ராணுவ பயன்பாடு- அவசர கால பிரகடனம் அல்ல

புத்ராஜெயா-
மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசாருக்கு துணையாக ராணுவம் களமிறக்கப்படுகிறதே தவிர அவசர கால நிலையை அமல்படுத்த அல்ல என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவே நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இன்னமும் வெளியே நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களை கட்டுப்படுத்தவே ராணுவம் பயன்படுத்தப்படவுள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment