கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்க மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீட்டிலேயே பாதுகாப்புடன் இருக்குமாறு பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் வலியுறுத்தினார்.
வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்த்து வீட்டிலேயே தங்களது பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட அவர், கொடுக்கப்பட்டுள்ள இரு வார விடுமுறை காலம் காப்பி கடையில் அமர்ந்து அரட்டை அடிப்பதற்கு அல்ல என்று மேலும் சொன்னார்.
வெளியிடங்களில் கூடாமல் வீட்டிலேயே இருப்பதன் மூலம் இந்த வைரஸ் இன்னும் அதிகமானோருக்கு பரவாமல் தடுக்க முடியும்.
இரு வார கால விடுமுறை சொந்த ஊர்களுக்கு செல்லவோ, மால்களில் உலா வரவோ, கடைகளில் அமர்ந்து அரட்டை அடிக்கவோ இல்லை. தங்களது வீட்டில் அமர்ந்து குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருக்கவே இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் இன்று ஆர்டிஎம்-இல் நேரலையாக பேசியபோது வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment