Thursday 19 March 2020

விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் மலேசியர்கள்- மஇகா களம் காணும்

கோலாலம்பூர்-
நாடு திரும்ப முடியாமல் சென்னை, திருச்சி விமான நிலையங்களில் சிக்கி தவிக்கும் மலேசிய இந்தியர்களை நாட்டிறற்கு திரும்ப அழைத்து வர அரசாங்கத்துடன் மஇகாவும் இணைந்து செயலாற்றும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதன் விளைவாக தங்கள் நாட்டுக்குள் அந்நியர்கள் நுழைவதற்கு பல நாடுகள் தடை விதித்துள்ள நிலையில் விமான போக்குவரத்தையும் நிறுத்தியுள்ளன. இத்ல் இந்தியாவும் ஒன்று.
இந்தியாவின் வெளியுறவு கொள்கையின்படி மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுக்கு விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளதால் இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற மலேசியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.
இவர்களை தாயகத்திற்கு திரும்ப அழைத்து வர அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதோடு வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடினிடம் வலியுறுத்தப்பட்டது.

அரசாங்கம் இந்தியாவின் வெளியுறவு அமைச்சுடன் பேசி இதற்கு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் சில வர்த்தகர்களின் உதவியோடு மஇகாவின் முயற்சியில் தனி விமானத்தை அனுப்பி அவர்களை வரும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். தனி ஒமானத்தில் அழைத்து வருவதற்கு அனுமதி கொடுத்தால் போதும். அதற்கான செலவீனங்களை மஇகாவேஏற்கும் என்று மஇகாவின் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன்குறிப்பிட்டார்.

அதற்கு முன் விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் மலேசியர்களுக்கு உணவும் தங்குமிட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.


No comments:

Post a Comment