Friday, 27 March 2020

காற்றில் 8 மணி நேரம் உயிர் வாழும் கோவிட்-19


உலகை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கோவிட்- 19 வைரஸ்  காற்றில் 8 மணி நேரம் உயிர் வாழும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரத்தில் உருவான வைரஸ் தொற்று இன்று 199
நாடுகளுக்கு பரவி 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பாதிக்கச் செய்துள்ள கோவிட்- 19 வைரஸ் இன்னும் பல மடங்கு பாதிப்புகளை ஏற்படுத்த வல்லது.

இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் இருமினாலோ, தும்மினாலோ அதன் மூலம் மற்றவருக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூட்டிய கோவிட்- 19 வைரஸ் காற்றில் 8 மணி நேரம் உயிர் வாழும்.

கால சூழ்நிலைக்கு ஏற்பவே இந்த வைரஸ் வாழும் காலம் மாறுபாடு காணும் எனவும் அதனால் மக்கள் விழிப்புணர்வோடு இருப்பதோடு வெளியில் செல்லும்போது முகக் கவசங்களை அணிந்து செல்வது அவசியம் எனவும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment