Saturday, 21 March 2020

மக்களுக்கு உதவிட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வெ.30 ஆயிரம் ஒதுக்கீடு

ஷா ஆலம்-
கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள மக்கள் நடமாட்ட கட்டுப்பாடு ஆணையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் வகையில் சிலாகூர் மாநில அரசு ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் 30,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இம்மாநிலத்திலுள்ள 56 சட்டமன்ற உறுப்பினர்களிடமும் வழங்கப்படும் இந்த நிதியின் மூலம் கட்டுப்பாட்டு ஆணையால் அத்தியாவசியப் பொருட்கள் இன்றி தவிக்கும் குடும்பத்தினருக்கும் உதவி பொருட்கள் வழங்க வழிவகுக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் சாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment