ரா.தங்கமணி
ஷா ஆலம்-
கோவிட்-19 நோய் தொற்று காரணமாக நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையினால் வீட்டுக்குள் முடங்கியுள்ள வறுமை கோட்டில் வாழும் மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கினார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான வீ.கணபதிராவ்.
கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தினசரி சம்பளத்திற்காகவும் அடிப்படை உதவிகள் தேவைப்படுவோரின் தகவல்களை திரட்டிய பின்னர் அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன.
நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை பின்பற்றி வீட்டுக்குள்ளேயே இருக்கும் மக்கள் தினசரி உணவு தேவைகளுக்கு சிரமப்படக்கூடாது எனும் நோக்கில் இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன என்றார் அவர்.
No comments:
Post a Comment