கோலாலம்பூர்-
கோவிட்-19 நோய் தொற்று தொடர்பில் இல்லங்களில் பரிசோதனை நடத்த எந்தவொரு தரப்பையும் அரசாங்கம் நியமிக்கவில்லை.
கோவிட்-19 நோய் தொற்று நாட்டில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில பொறுப்பற்ற தரப்பினர் மோசடிநடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
வீடுகளில் பரிசோதனை நடத்த எந்தவொரு தரப்பினரையும் அரசாங்கம் நியமிக்கவில்லை என்று தேசிய பாதுகாப்பு மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆதலால் மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அது கேட்டுக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment