Sunday, 22 March 2020

கோவிட் 19- உயிர்பலி 8ஆக உயர்ந்தது

பெட்டாலிங் ஜெயா-
கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

இதற்கு முன் அறுவர் மட்டுமே மரணமடைந்திருந்த நிலையில் இன்று மாலை நிலவரப்படி மேலும் இருவர் உயிரிழந்தனர். அதில் வியட்னாமிற்கு பயணம் மேற்கொண்டிருந்த 57 வயது ஆடவரும் தப்லிக் சமய கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆடவர் ஒருவரும் அடங்குவர் என்று சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

மேலும் கோவிட்-19 வைரஸ் தொற்றால் 1,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment