Tuesday, 24 March 2020

கோவிட்-19: பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்தது

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 212ஆக உயர்வு கண்டுள்ளது.
தற்போது வரை இந்நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,518ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 57 தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள 212 பேரில் 123 பேர் தப்லிக் சமய மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ஆவர்.

No comments:

Post a Comment