நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையைன 10% மக்கள் பின்பற்றுவதில்லை என்று தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சைஃபுடின் அப்துல்லா தெரிவித்தார்.
நாட்டில் பரவியுள்ள கோவிட் 19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அதனை சில தரப்பினர் மதிப்பதில்லை. வெளியிடங்களில் மக்கள் நடமாட்டம் இன்னமும் உள்ளது. நாட்டில் உள்ள 10 விழுக்காட்டினர் அதாவது 300,000 மக்கள் இந்த கட்டுப்பாட்டு ஆணையை மதித்து நடப்பதில்லை என்று அவர் சொன்னார்.
No comments:
Post a Comment