கோலாலம்பூர்-
நாட்டின் அரசியல் பரபரப்பான அரசியல் நெருக்கடியில் ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை நசுக்கப்பட்டுள்ளது என்று பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் கருத்து தெரிவித்தார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது மிகப் பெரிய நம்பிக்கையுடன் 'நம்பிக்கைக் கூட்டணியை' மக்கள் ஆட்சியில் அமர வைத்தனர். ஆனால் இன்று பதவி சுகம், சுயநல அரசியல் காரணங்களுக்காக மக்களின் ஜனநாயக உரிமை அத்துமீறப்பட்டுள்ளது.
நிலையான ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியாமல் தடுமாறும் இன்றைய இக்கட்டான சூழல் மக்களுக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு உரிய சலுகைகள் கிடைத்து விடும்.
ஆனால் அரசியல் நெருக்கடியை நாடு எதிர்கொண்டுள்ள சூழல் நாட்டின்
பொருளாதாரத்தை பாதிப்புறச் செய்வதோடு அதன் தாக்கம் எளிய மக்களையே வெகுவாக பாதிக்கும் என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும்.
தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு உரிய தீர்வு கண்டு மக்களின் நம்பிக்கையை சிதறடிக்கச் செய்யாத வகையிலான அரசாங்கம் மீண்டும் அமைய வேண்டும் என்று டான்ஶ்ரீ கேவியஸ் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment