கோலாலம்பூர்-
2018ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் பெரும்பான்மையில் ஆட்சி அமைத்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அஸ்தமனத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது.
பிகேஆர், ஜசெக, பெர்சத்து, அமானா ஆகிய கட்சிகளை உள்ளடக்கி உதயமான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பதவி அதிகார மோகத்தினால் புதிய கூட்டணிக்கு வித்தடும் பரபரப்பான அரசியல் சூழல் இன்று தென்படத் தொடங்கியுள்ளது.
அம்னோ, பாஸ் கட்சியுடன் இணைந்து பெர்சத்து, அஸ்மின் அலி பிகேஆர் ஆதரவாளர்கள், மசீச, மஇகா, ஜிபிஎஸ் ஆகிய கட்சிகளை உள்ளட்க்கிய புதிய கூட்டணி எப்போது வேண்டுமானாலும் ஆட்சி அமைக்கலாம்.
அதற்கான அடித்தளம் இன்று பிற்பகல் முதல் தொடங்கியுள்ள நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படலாம்.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை கவிழ்த்து பக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சி அமைக்கவிருக்கும் சூழலில் இந்த பரபரப்பான அரசியல் சூழல் மலேசியர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது/.
No comments:
Post a Comment