பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை கவிழ்த்து புதிய கூட்டணி அரசாங்கம் அமைக்கப்படுவது தொடர்பில் பிரதமர் துன் மகாதீர் முகம்மதுவை சந்திக்கும் டத்தோஶ்ரீ அன்வாரின் முயற்சியில் தோல்வியில் முடிந்தது.
தமது துணைவியார்
டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில், ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோருடன்
பிரதமர் அலுவலகத்தில் துன் மகாதீரை சந்திக்க அன்வார் முற்பட்டார்.
ஆயினும் ஒரு மணி
நேரமாக காத்திருந்தும் துன் மகாதீரை சந்திக்க முடியாமல் டத்தோஶ்ரீ அன்வார் ஏமாற்றத்துடன்
திரும்பியுள்ளது அரசியலில் பரபரப்பை மேலும் வலுவூட்டியுள்ளது.
புதிய கூட்டணி
அரசாங்கம் அமையவிருப்பது தொடர்பில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் மாமன்னரை சந்திக்கும்
அன்வார் இப்ராஹிம் பக்காத்தான் ஹராப்பானை கவிழ்க்கும் சதி செயலை மாமன்னரிடம் விவரிக்கக்கூடும்.
No comments:
Post a Comment