கோலாலம்பூர்-
இந்தியர்களின் பெருநாள் கொண்டாட்டங்களில்
ஒன்றான பொங்கல் பண்டிகை முஸ்லீம்களுக்கு ‘ஹராம்’ ஆனது என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள
சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் பல்வேறு கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளது.
நாளை 15ஆம் தேதி கொண்டாடப்படும்
பொங்கல் பண்டிகை சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் வைத்து வழிபாடும் திருநாளாக
இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். பொங்கல்
பண்டிகை இந்துக்களின் சமயப் பண்டிகை என்பதை காட்டிலும் உழவர்களின் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது..
அனைத்து இன மக்களிடையேயும்
புரிந்துணர்வு அடிப்படையில் கடந்த காலங்களில் அனைத்து இன மக்களிடையேயும் ஒற்றுமையை
வளர்த்து வந்த பொங்கல் பண்டிகைக்கு ‘இனவாத’ சாயம் பூசியுள்ள கல்வி அமைச்சின் நடவடிக்கையை
பலரும் சாடி வருகின்றனர்.
பள்ளிகளில் கொண்டாடப்படும்
பொங்கல் கொண்டாட்டங்கள் முஸ்லீம் பணியாளர்கள் பங்கெடுக்கக்கூடாது எனவும் அது ‘ ஹராம்’
ஆனது எனவும் கூறி மாநில கல்வி இலாகாவின் இயக்குனர்களுக்கு
வெளியிடப்பட்டுள்ள் அறிக்கை கூறப்பட்டுள்ளது.
ஒற்றுமையை வளர்க்க வேண்டிய
பள்ளிகளிலேயே இனவாதம் கொண்டு பிரிவினையை ஏற்படுத்த முயலும் கல்வி அமைச்சின் இத்தகைய
போக்கு கண்டிக்கத்தக்கது எனவும் ‘ஹராம்’ என
சொல்வதற்கு பொங்கல் மாமிச இறைச்சியை கொண்டு செய்யப்பட்டல்ல; மாறாக பாலில் செய்யப்படும்
பொங்கலே ஹராம் என்பதா? என பலர் கல்வி அமைச்சின் நடவடிக்கையை விமர்சித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment