இன்று மலாக்காவில் நடைபெற்ற பிகேஆர் கட்சியின் இளைஞரணி கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது.
கருப்பு சட்டை அணிந்து நுழைவு
அட்டை இல்லாமல் வந்திருந்த பேராளர்கள் மாநாட்டு அறைக்குள் அனுமதிக்கப்படாததால் காலை
8.00 மணி அளவி சம்பந்தப்பட்ட ஆடவர்களுக்கும் பாதுகாவலர்களுக்கு இடையே வாக்குவாதம் மூண்டது.
சில தீர்மானங்களின் மீது
வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதால் மாநாட்டுக்கு வரும் பேராளர்கள் நிச்சயம் நுழைவு அட்டையை
எடுத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதன் பின்னர் மண்டபத்திற்கு
வெளியே சில பேராளர்களிடையே கைகலப்பு மூண்டது. கைகலப்பின்போது முகத்தில் குத்துப்பட்ட
ஒருவருக்கு மூக்கில் ரத்தம் வழிந்தது. அதோடு
சிலர் கற்களை வீசியெறிந்தனர் என்று சிலர் கூறினர்.
No comments:
Post a Comment