இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையினர் தங்களின் தன்மான உரிமையை காக்க தன்மான கூட்டம் நடத்தும்போது சிறுபான்மையின மக்கள் தங்களின் மொழி உணர்வு காக்கப்பட கருத்தரங்கு நடத்துவது எவ்வகையில் தவறாகும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கேள்வி எழுப்பினார்.
தாய்மொழிப்பள்ளிகளில் 'காட்' சித்திர எழுத்து அமலாக்கம் செய்யப்படுவதற்கு சீனர்களின் கல்வி அமைப்பான 'டோங் ஸோங்' எதிர்ப்பு மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
'காட்' எதிர்ப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டால் அது மலாய்க்காரர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கி அது பாதகமான செயலுக்கு இட்டுச் செல்லும் என பிரதமர் துன் மகாதீர் எச்சரித்துள்ளார்.
தாய்மொழிப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோரின் சம்மதத்துடன் பள்ளிகளில் அமல்படுத்தலாம் என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அமைச்சரவை முடிவை மீறி அதனை அமல்படுத்த நீதிமன்றத்தை சில தரப்பினர் நாடியுள்ளனர்.
காட் அமலாக்கத்தில் தீவிரம் காட்டும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தனது தேர்தல் வாக்குறுதிகளை அமல்படுத்iதுவதில் தீவிரம் காட்ட வேண்டும்.
காட் சித்திர மொழியை தாய்மொழிப் பள்ளிகளில் அமல்படுத்த காட்டும் தீவிரத்தை மாணவர்களின் பிடிபிடிஎன் கல்வி கடனுதவியை தீர்ப்பதிலும் புறப்பாட நடவடிக்கைகளை மேம்படுத்துவதிலும் காட்ட வேண்டும்.
காட் சித்திர மொழி அமலாக்கம் நொடர்பில் தங்களது உரிமையை பற்றி பேசுவதற்கு கூட சிறுபான்மையினத்தினருக்கு உரிமைகள் கிடையாதா?
முந்தைய ஆட்சியின்போது தலைதூக்கியிருந்த இனவாத பிளவுகள் தற்போதைய பக்காத்தான் கூட்டணியிலும் தொடர்வது இக்கூட்டணி மீதான நம்பிக்கையை குறைக்கச் செய்கிறது.
பெரும்பான்மையினர் தங்களின் உரிமைக்காக கூட்டம் நடத்தும்போது சினுபான்மையினர் தங்களின் மொழி உணர்வை காக்க கூட்டம் நடத்துவதில் எவ்வகையில் தவறாகும்? என்று கணபதிராவ் வினவினார்?
No comments:
Post a Comment