Friday, 6 December 2019

தீ விபத்தில் 3 பேர் பலி

கிள்ளான் –

அதிகாலை வேளையில் நிகழ்ந்த தீ விபத்தொன்றில் ஒரே குடும்பத்தைச்  சேர்ந்த மூவர் பலியாகினர்.

இத்தீவிபத்தில் 70 வயதான புவா யோக் கியாட், சூன் சீ எங் (55), மாற்றுத் திறனாளியான அங் கார் ஹியான் (22) ஆகியோர் பலியானதோடு 55 வயது மதிக்கத்தக்க அங் சேங் கியாட் (55) 50 விழுக்காடு தீப்புண் காயங்களுடன் உயிர் தப்பினார். அதோடு அங் கார் சின் (27), அங் காம் சியூ (30) ஆகியோர் தப்பித்துக் கொண்டனர்.

அதிகாலை 3.00 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் அடுத்த 1 மணி நேரத்திற்குள் தீயை முழுமையாக அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் வீடு முழுமையாக சேதமடைந்ததோடு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்களும் சேதமடைந்தது என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப் படை இலாகாவின் துணை இயக்குனர் ஹஃபிஸாம் முகமட் நோர் தெரிவித்தார்.

மரணமடைந்த மூவரின் உடல்களும் சவப்பரிசோதனைக்காக  போலீசாரிடம் ஒப்படைக்கப்ட்டதோடு தீப்புண் காயங்களுக்கு ஆளான நபர் மருத்துவ சிகிச்சைக்காக கிள்ளான் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment