Thursday 10 October 2019

பாஸ், அம்னோவுடன் கூட்டணி அரசாங்கமா? - பிரதமர் நிராகரிப்பு

கோலாலம்பூர்-
அம்னோ, பாஸ் கட்சிகளுடன் இணைந்து புதிய அரசாங்கம் அமைக்கும் ஆலோசனையை பிரதமர் துன் மகாதீர் நிராகரித்தார்.
இந்நாடு பல இன மக்களை கொண்டது. குறிப்பிட்ட ஓர் இனம் மட்டும் தலைமையேற்கும் வகையிலான நடவடிக்கைகள் ஏற்று கொள்ள முடியாததாகும்.

அம்னோ, பாஸ்  கட்சிகளுடன் இணைந்து புதிய அரசாங்கம் அமைப்புதற்கு தற்போது அவசியம் ஏதுமில்லை என்று அவர் மேலும் சொன்னார்.

மலாய்க்காரர் உரிமையை காப்பதில் துன் மகாதீர் உறுதியாக இருக்கிறார் என்றால் அம்னோ, பாஸ், சபா, சரவா கட்சிகளுடன் இணைந்து புதியரஅரசாங்கம் அமைக்கலாம் என்று அம்னோவின் துணைத் தலைவர் அகமட் மஸ்லான் ஆலோசனை கூறியிருந்தார்.

No comments:

Post a Comment