இன்று 10-ஆம் தேதி தொடக்கம் தங்களுடைய ரசிகர்களுக்காக ராகா ‘தமிழ் பேசி காசை அள்ளு’ எனும் போட்டியை வானொலியில் ஏற்றி நடத்தி ரொக்கப் பரிசு வழங்கவுள்ளது.
இப்போட்டியில் கலந்து கொண்டு ரொக்கப் பரிசைத் தட்டிச் செல்ல விரும்புவார்கள், காலையில் சுரேஷ் மற்றும் அகிலா படைக்கும் கலக்கல் காலை நிகழ்ச்சியில் இணைந்து, அவர்கள் வழங்கும் கடவுச்சொல்லைக் கொண்டு இப்போட்டியில் பங்கேற்கலாம். பிறகு, ராகாவுடன் காலை முதல் இரவு வரை இணைந்திருந்து அறிவிப்பாளர்கள் அழைக்கலாம் என்று சொன்னவுடனே 03-95430993 எண்களுக்கு அழைக்க வேண்டும்.
அழைத்து அறிவிப்பாளர்களுடம் அந்தக் கடவுச்சொல்லைச் சொல்லி ‘தமிழ் பேசி காசை அள்ளு’ போட்டியின் அடுத்தச் சுற்றுக்குச் செல்லலாம். அதன் பிறகு, அறிவிப்பாளர்கள் கொடுக்கும் 3 சொற்களைக் கொண்டு 30 வினாடிக்குள் ஒரு வாக்கியத்தை அமைக்க வேண்டும். அந்தச் சொற்களைப் பயன்படுத்தி சிறப்பான வாக்கியத்தை வழங்கும் போட்டியாளர்களுக்கு ரிம.200 வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெற்றிப் பெறும் போட்டியாளர்கள் ரிம.150 மதிப்புள்ள சுவாமி சிவானந்த ஹம்பர் பரிசு பொருட்களையும் தட்டிச் செல்லும் அரிய வாய்ப்பும் காத்துக் கொண்டிருக்கின்றது.
மேல் விவரங்களுக்கு, raaga.my அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.
No comments:
Post a Comment