Thursday 15 August 2019

ஸாகீர் நாய்க்கை வெளியேற்றுக; அமைச்சர்கள் வலியுறுத்து

கோலாலம்பூர்-
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் நாய்க் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட வேன்டும் என்ற தங்களை நிலைப்பாட்டை இந்திய அமைச்சர்கள் இன்று அமைச்சரவையில் முன்வைத்துள்ளனர்.
சில நாட்களாக சர்ச்சைக்கு வித்திட்ட ஸாகீர் நாய்க் விவகாரம் இன்றைய அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்று அமைச்சர் குலசேகரன் முன்பு கூறியிருந்தார்.

அதன்படி இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஸாகீர் நாய்க் இந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் குலசேகரன், தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங், நீர், நிலம், இயறகை வள அமைச்சர் சேவியர் ஜெயகுமார் ஆகியோர் பிரதமர் துன் மகாதீரிடம் தங்களது ஆதங்கத்தை முன்வைத்தனர்.

ஸாகீர் நாய்க் மலேசியாவில் இருப்பதால் எவ்வித நன்மையு வந்துவிடப்போவதில்லை என்ற எங்களின் கருத்துகளுக்கு பிரதமர் செவி சாய்த்தார்.  இதன் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அவரின்  முன்டிவுக்கே தாங்கள் விட்டு விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அண்மையில் கிளந்தானின் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஸாகீர் நாய்க், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 100% ஆதரவு கொடுக்கும் மலேசிய இந்தியர்கள் பிரதமர் துன் மகாதீரிடம் விஸ்வாசம் காட்டுவதில்லை என்று கூறியது நாட்டில் பெரும் சர்ச்சையாக  வெடித்து வருகிறது.

No comments:

Post a Comment