Wednesday 10 July 2019

தேமு ஆலோசனை மன்றத் தலைவராக டத்தோஸ்ரீ நஜிப் நியமனம்

கோலாலம்பூர்-
தேசிய முன்னணி ஆலோசனை மன்றத்தின் தலைவராக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நியமனம் செய்யப்பட்டார்.
நேற்று நடைபெற்ற தேமு உச்சமன்றக் கூட்டத்தில் இந்த நியமனம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேமு தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெரிவித்தார்.

தேமுவின் உச்சமன்றக் கூட்டத்தில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி, மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங், மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், அம்னோ புத்ரா, புத்ரி பிரிவினர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment